MARC காட்சி

Back
நடுகல் வீரன்
000 : nam a22 7a 4500
008 : 200522b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a நடுகல் வீரன்
300 : _ _ |a நடுகல் சிற்பம்
340 : _ _ |a கல்
500 : _ _ |a

         ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள கரட்டடிப்பட்டி என்னும் ஊரில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எதிரில் திறந்த வெளியில் சில நடுகற்கள் காணப்படுகின்றன. இந்த நடுகற்கள் விசயநகரர்-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அதில் ஒரு நடுகல்லான இந்த நடுகல் கொடிய புலியைக் குத்திக் கொன்று தானும் இறந்து பட்ட வீரனுக்கு எடுப்பிக்கப்பட்ட நினைவுக் கல்லாகும். இக்கல் புலிக்குத்திப் பட்டான் கல் என்று அழைக்கப்படும். இந்த நடுகல்லில் அவனோடு சேர்ந்து உயிர் துறந்த அவனது மனைவியும் சிறப்பிக்கப்பட்டுள்ளாள். செவ்வக வடிவ பலகைக்கல்லில் புலியைக் குத்திக் கொன்று தானும் பட்ட வீரனின் வீரச்செயலும், வீரனை சுவர்க்கத்திற்கு தேவமங்கையர் அழைத்துச் செல்லும்  காட்சியும், மேலுலகத்தில் அவ்வீரன் சிவபூசை செய்து சிவபதவி அடையும் நிலையுமாக மூன்று நிலைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

520 : _ _ |a

         “புலிக்குத்திப்பட்டான் கல்“ என்று கி.பி.6-7-ஆம் நூற்றாண்டுகளில் நடுகற்களில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் புலியைக் கொன்று தானும் இறந்து பட்ட வீரனுக்கு எடுக்கப்பட்ட வீரக்கல்லானது பிற்காலத்தில் மூன்று வகையான காட்சிப் படிமங்களோடு காட்டப்படுவது மரபாக மாறியது. முதல் நிலையில் வீரன் புலியைக் கொல்லுதலும், இரண்டாம் நிலையில் அவனின் வீரச் செயலுக்காக தேவமங்கையர் அவனை கைபிடித்து மேலோர் உலகம் அழைத்துச் செல்லுதலும், மூன்றாம் நிலையில் அவன் உயர்பதவி பெற்று சிவபூசையில் ஈடுபடலுமாய் இக்காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளமை சிறப்பு.

653 : _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், கொங்கு நாடு, தருமபுரி, தர்மபுரி, சதிக்கல், கோபிச்செட்டிப்பாளையம், கோபி, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரட்டடிபாளையம், ஈரோடு, புலிக்குத்திப்பட்டான் கல், நடுகல் வீரன்
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் |b கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் |c கரட்டடிபாளையம் |d ஈரோடு |f கோபிசெட்டிபாளையம்
850 : _ _ |a கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில்
905 : _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 11.449344
915 : _ _ |a 77.403847
995 : _ _ |a TVA_SCL_001553
barcode : TVA_SCL_001553
book category : கற்சிற்பங்கள்
cover :
cover images TVA_SCL_001553/TVA_SCL_001553_ஈரோடு_கோபிச்செட்டிப்பாளையம்-நடுகல்-001.jpg :
Primary File :

TVA_SCL_001553/TVA_SCL_001553_ஈரோடு_கோபிச்செட்டிப்பாளையம்-நடுகல்-001.jpg